Monday, October 19, 2009

Aadhavan - Review - Surya Nayathara K.S.Ravikiumar

ஒரு வரிக் கதை. பணத்துக்காக கொலை செய்யும் கூட்டம். அதில் ஒருவர் சூர்யா(ஆதவன்). அப்பா என்று கூட்ட தலைவனை அழைக்கும் அளவு பாசமுள்ள சூர்யா. போகிற போக்கில் சுடும் திறமை கொண்ட சூர்யா நாடு விட்டு நாடு சென்று சாதாரணாமாக கொல்கிறார். சாயாஜி ஷிண்டேவிடம் வேலை செய்யும் சூர்யா. விசாரணை கமிஷன் அறிக்கையை தடுக்க முனையும் மருத்துவர் ஒருவனே நிஜ வில்லன். அந்த நீதிபதியை கொல்ல அனுப்பபடுகிற சூர்யா கொல்ல முயல்கையில் குறி தவறுகிறது. போலீஸால் துரத்தபடும் நாயகன். துரத்தல்கள் அயனை நினைவு படுத்துகின்றன.
அதனால் வடிவேலுவின் மாப்பிள்ளை முருகனாக கொல்கத்தாவில் இருக்கும் நீதிபதியின் வீட்டிற்க்கு சமையல்காரனாக நுழைகிறார் சூர்யா. இதற்காக சத்யனை கட்த்துகிறார்கள். வீட்டில் நுழையும் காட்சிகள் ந்ல்ல கலகலப்பு. அதிலிருந்து ஆரம்பிக்கும் வடிவேலுவின் காமெடி படம் நெடுக சரவெடி. சண்டை காட்சிகளிளை விட சூர்யா செய்யும் ஆசனம் அனைத்தும் ஆச்சர்ய பட வைக்கின்றன. சூர்யாவின் உடல் மொழிகள் அபாரம். அனாவசிய நடிப்பால் கைதட்டல் பெறுகிறார் சூர்யா. சொன்னது கேட்கும் உடல் கொண்ட சூர்யா அவரது தந்தை சிவக்குமாருக்கு நன்றி சொல்கிறார் ஒரு இடத்தில். கொங்கு மொழியில் பேசி அங்கு அனைவரையும் கவரும் சூர்யா, நீதிபதியை கொல்ல முயலும் காட்சிகளில் வடிவேலுவின் காமெடி உச்சம். நயந்தாரா இங்கே தாராவாக அறிமுக படுத்தபடுகிறார். தாராவின் முறை மாப்பிள்ளையாக ரமேஸ் கண்ணா கிடாருடன் கொடுமை செய்கிறார்.

டார்ஜிலிங் செல்லும் குடும்பத்துடன் சூர்யாவும் செல்கிறார். அங்கே காரில் குண்டு வைக்க அங்கேயும் குறி தவறுகிறது. நயந்தாராவின் சந்தேகத்திற்கு ஆளாகும் சூர்யா நயந்தாராவிடம் நான் தான் காணாமல் போன உங்கள் மாதவன் எனக்கூற நயனுக்கு சூர்யாவின் மேல் காதலரும்புகிறது. குடும்பத்தினர் அனைவரும் நம்பும் இந்த விஷயம் நீதிபதிக்கு மட்டும் தெரியாமல் மறைக்கபடுகிறது.
இங்கே ஒரு சின்ன ப்ளாஷ்பேக். சூர்யாவின் 10 வயது. சூர்யாவே 10 வயது சிறுவனாக நடித்துள்ளார். அனுஹாசன் அத்தையாக இருக்க அம்மா இல்லாத சூர்யா. பாசமான அத்தை, கோபம் கொண்ட அப்பா. நண்பனின் அப்பாவினை காப்பாற்ற பொய்யாக அப்பாவினை போனில் மிரட்டும் சூர்யா சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்படுகிறார். அத்தை மகளின் பிறந்த நாளில் நண்பனின் தாயால் மாற்றி கொடுக்கப்பட்ட பரிசால் அத்தை உயிர் பறிக்கபடுகிறது. கைது செய்யப்படும் தருணத்தில் அப்பாவினை சுட்டு விட்டு ஓடும் சூர்யா அடைவது சாயாஜி ஷிண்டேவிடம். அன்றிலிருந்து காசுக்கு கொலை செய்யும் ஆளாக வளருகிறார்.
குறி தவறுவதால் கோபமடையும் நிஜ வில்லன் சாயாஜி ஷிண்டேவிடம் மல்லுக்கட்ட, ஆனந்தபாபு நீதிபதியை கொல்ல அனுப்பபடுகிறார். அதனை கண்டுபிடித்த சூர்யா ஆனந்தபாபுவினை அடித்து எறிந்து வளர்ப்பு தந்தையிடம் நான் நீதிபதியை கொல்ல அனுமதிக்க மாட்டேன் என சவால் விட ஒரு சின்ன திருப்பம்.
சூர்யா கொலை செய்ய வந்தவன் என வடிவேலு மற்றும் சத்யனால் குடும்பதினரிடம் சொல்லபட்டு, ரியாஸ்கானால் கைது செய்யபடும் சூர்யா, துப்பாக்கி முனையில் நீதிபதியினையும் நயனையும் கடத்த, குடும்பத்தினரிடம் சூர்யாதான் உங்களது மாதவன் என கமிஷ்னர் கூற, உண்மையை அறிந்த குடும்பம் சூர்யாதான் மாதவன் என நீதிபதியிடம் கூற கிளைமாக்ஸ்.
நிஜ வில்லன் ஆஜராக அந்தரத்தில் தொங்கும் நயனையும் அப்பாவினையும் காப்பாற்ற குண்ட்டிபட்ட சூர்யா ஹெலிகாப்டரில் செய்யும் சாகசங்கள் கைதட்டல் பெறுகின்றன. முடிவு சுபம்.
ஒரு சாதாரண கதை. தொய்வில்லாமல் கொண்டு சென்றுள்ள இயக்குனர் ரவிகுமாரை பாராட்டலாம். லாஜிக் பொத்தல்கள் இம்மாதிரியான திரைக்கதையில் இருப்பது தவிர்க்கமுடியாத ஒன்றே. ஒரு பெரிய வில்லன் நீதிபதியை கொல்ல சூர்யாவினை மட்டுமே நம்புவது மிகப்பெரிய பொத்தல். சந்தேகபடும் நயன் சூர்யாவினை மட்டும் விசாரிப்பது, நம்புவது ஒட்டவில்லை. நீதிபதியினை காப்பாற்று என கமிஷ்னர் சூர்யாவினை கேட்பது தமிழ் சினிமாவில் மட்டும் சாத்தியம்.
இசை ஹாரிஸ். ஹசிலே ஃபிசிலே பாடல் இசைமழை. லொகேஷன்களும் படம் பிடித்த விதமும் அருமை. வெளிநாடுகளில் மற்றவர்கள் வேடிக்கை பார்க்க ஆடுவதை இந்த பட்த்திலும் சூர்யா தவிர்த்துள்ளார். ஏனோ ஏனோ பனித்துளி பாடல் மெலடியில் சேரவில்லை. வாராயோ வாராயோ பாடல் சுமார். மற்ற பாடல்கள் மனதில் நிற்கவில்லை.
சண்டைக்காட்சிகள் நன்றாக காட்சியமைக்கபட்டுள்ளன. கிளைமாக்ஸ் காட்சி அருமை.
வடிவேலு தான் பட்த்தின் பெரியபலம். ஒவ்வொரு காட்சியிலும் ரசிக்க வைக்கிறார். பட்த்தின் இறுதியில் வரும் ஒண்னு விட்ட உதயநிதியும். ரெண்டு விட்ட ரவிகுமாரும் அறிமுகபடுத்தபடும் காட்சியில் விநாயகா என்று கூற மறுபடியும் முதலிருந்தா என அலறுவது அலம்பல்.
பட்த்தில் நிறைய நடிகர் கூட்டம். சரோஜா தேவிக்கு பெரியதாக எந்த வேலையும் இல்லை. படம் நெடுக ஏராளமான மேக்கப்புடன் வருகிறார் வடிவேலு கிண்டல் செய்யும் அளவிற்க்கு.
பட்த்தின் பெரிய பலம் சூர்யா. கடுமையான உழைப்பு தெறிகிறது. ஆனால் அயனின் சாயல்கள் தெரிவது பெரிய பலவீனம். தனது உடல் மொழிகளால் கொள்ளை கொள்கிறார். நொடியில் மாறும் முக பாவனைகளால் அட போட வைக்கும் திறமை வெகு இயல்பாக கைகூடுகிறது. இத்திறைமைகள் ஒரு பொழுது போக்கு பட்த்திற்க்கு அவசியமானவைகளாக தெரியுவில்லை.